Delhi Police is coming for inverstication tomorrow morning
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் அளிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்துவதற்காக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வருகின்றனர்.
கடந்த 17ஆம் தேதி டெல்லியிலுள்ள தனியார் விடுதியில் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் தினகரன் மீது டெல்லி குற்றவியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து 4 நாட்கள் விசாரணைக்குப் பின்னர் நேற்றிரவு டிடிவி தினகரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். இதனைத் தொடர்ந்து டிடிவியை 5 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே லஞ்சம் அளிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடத்துவதற்காக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நாளை சென்னை வருகின்றனர். அப்போது சசிகலாவுக்கு நெருங்கிய நிர்வாகிகள் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி போலீசாரின் திடீர் சென்னை வருகை மேற்குமண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் பெரும் தலைவலியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே டிடிவி.தினகரனை டெல்லி போலீசார் கூடவே அழைத்து வரலாம் என்றும் கொச்சி பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
