விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ள டிடிவி தினகரனிடம் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி மாளிகையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளித்த வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், டிடிவி தினகரனை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் டிடிவி ஐ போலீசார் இன்று சென்னை அழைத்து வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெசன்ட் நகரில் இருக்கும் ராஜாஜி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தினகரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினகரனின் வருகை முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டதால் பிரத்யேகமாக 2 அறைகளை ஒதுக்கப்பட்டுள்ளதாம். சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த அறையில் டிடிவியிடம் அதிகாரிகள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் இன்று மாலை வரைக்கும் டிடிவி தினகரன் இருப்பார் என்றும் நாளை அவர் கொச்சி அழைத்துச் செல்லப்படுவார் என்றும் ராஜாஜி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.