டெல்லி ஒரு மினி இந்தியா எனவே அந்த மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு இணையானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

BY. T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லி ஒரு மினி இந்தியா எனவே அந்த மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு இணையானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

"டெல்லி வாக்களித்திருக்கிறது என்றால் லட்சக்கணக்கான மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்கள், பெங்காலிகள், குஜராத்தியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வசிக்கும் மாநிலங்களின் உணர்வை பிரதிபலிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை டெல்லி தேர்தல் ஊக்கப்படுத்துவதாக உள்ளது.ஒரு மாநிலத் தேர்தல் என்பதை விட டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு இணையானது என்று கொள்ளலாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.