Asianet News TamilAsianet News Tamil

தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - விசாரிக்க ரெடியாகும் டெல்லி போலீஸ்...

delhi court approved 5 days approval for enquiry
delhi court-approved-5-days-approval-for-enquiry
Author
First Published Apr 26, 2017, 5:01 PM IST


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் டெல்லி போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு கடந்த 4 நாட்களாக டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார்.

இதையடுத்து டிடிவி தினகரன் நேற்று இரவு கைது செய்யபட்டார். பின்னர்,  இன்று டெல்லி ஹிஸ் தசாரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து தினகரன் தரப்பில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பிலும் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை  7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவிற்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தினகரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் முதலில் அனுமதி வழங்கியது. ஆனால் டெல்லி போலீசார் தரப்பு விசாரணை காவலுக்கான நாட்கள் போதாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

இதையடுத்து தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios