நேற்று மதியம் முதல் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சலும், தொண்டை வலியும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அனுப்பதிப்பது குறித்து அவர் உரையாற்றினார். டெல்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் கொரோனா பாதிக்கப்படும் டெல்லிவாசிக்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முதல் அதிகாரிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, நேற்று மதியம் முதல் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சலும், தொண்டை வலியும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே கெஜ்ரிவால் விரைவாக குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ட்விட்டரில் பதிவிட்டும் வருகின்றனர்.