பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை  தனிமைப்படுத்தாதவரை  பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் விளக்கமளித்துள்ளார் .  இந்திய குடியுரிமை சட்டம் குறித்தும்  அதற்கு எதிராக நடந்த போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்த  நிலையில் அது நாடு முழுவதும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது . இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் ரசியா டயலாக் 2020 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய  பிபின் ராவத், பயங்கரவாதத்துடனான போர் இன்னும் முடியவில்லை என்றார்,  சில காரணங்களால் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

பயங்கரவாதிகளின் வேரைக் கண்டறிந்து அழிப்பதற்காக போராடி வருகிறோம் .  இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடங்கியுள்ளது .  பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு உதவுவோர் யாராக இருந்தாலும் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் .  சில நாடுகள் பயங்கரவாதிகளை தங்கள் பிரதிநிதிகளாக பயன்படுத்தி அவர்களுக்கு  ஆயுதங்கள்,  நிதியை வழங்கி ஊக்குவிக்கின்றனர் .  இதனால்தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.  தொடர்ந்து பேசிய அவர்,  அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அவர்களை அழைத்தாலும் தாலிபன் மற்றும் மற்ற பயங்கரவாத அமைப்புகள் அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துவதால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை என்றார். 

இனி பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் எதுவாக இருந்தாலும் ,  அதை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் .  அது பயங்கரவாதத்துக்கு எதிரான முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் ,  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும் என்றார் . அதனையடுத்துப் பேசிய ஐரோப்பிய வெளியுறவு மற்றும் தென்காசிய மற்றும்  அதற்கான காமன்வெல்த் அலுவலக இயக்குனர் கேர்த் பேலே ,  பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்படுவது தெளிவாக தெரிந்துள்ளது ,  பயங்கரவாத அமைப்புகள்  பாக்கிஸ்தான்  அரசுக்கும் தெற்காசியவிற்கும் மிகப்பெரும் சவாலாக இருந்து வருகின்றனர் என்றார்.