Youtuber Maridhas: வாண்டடா வந்து சிக்கி சிறையில் கம்பி எண்ணும் மாரிதாஸ்.. வச்சு செய்ய தயாராகும் திமுக..!
திமுக குறித்து நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகவலைதளங்களில் திமுக குறித்து அவதூறாக கருத்துகளை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபர் மாரிதாஸ். பேராசிரியராக மதுரையின் பிரபல கல்லூரிகளில் பணியாற்றிய அவர் ஆரம்பத்தில் இடதுசாரி கருத்துகளை கொண்டிருந்தார், பின்னர் அன்னாஹசாரே இயக்கத்தில் இணைந்து மதுரையில் போராட்டம் நடத்தினார். முதலில் முகநூல் பக்கம் வந்த மாரிதாஸ் பின்னர் வெள்ளைபோர்டு வைத்துக்கொண்டு யூடியூப் பக்கம் வந்து பேச ஆரம்பித்தார். குறிப்பாக திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து பல்வேறு விமர்சனங்களை மாரிதாஸ் முன்வைத்திருந்தார். இதனையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே கொஞ்சம் காலம் மௌனமாக இருந்த அவர் மீண்டும் திமுக குறித்து விமர்சிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்கள் மீதும் , காவல்துறை மீதும் மாரிதாஸ் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார், இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் மறைவை சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக பதிவிடுவதை குறுப்பிட்டு திமுக, திகவினரில் சிலர் அவ்வாறு பதிவிடுவதாக குற்றம் சாட்டி மாரிதாஸ் பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன் தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு பிரிவினைவாத காஷ்மீர்போல் தமிழகம் மாறுகிறதா என்ற அடிப்படையில் கருத்தை பதிவிட்டிருந்தது சர்ச்சையானது.
இந்நிலையில், மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, மதுரை புதூர் சூரியா நகரை சேர்ந்த யூடியூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை பொது அமைதியை சீர்குலைத்தல், தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனையடுத்து, மாரிதாஸ் மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மாரிதாஸ் உத்தமபாளையம் கிளை சிறைக்கு அடைக்கப்பட்டார். ஏற்கனவே திமுக குறித்து நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், பாஜக கல்யாணராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.