Asianet News TamilAsianet News Tamil

EVKS Elangovan: ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடியார் தொடர்ந்த அவதூறு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

கடந்த 2015ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது சில ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார். இதனை கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டது.

defamation case dismissed against EVKS Elangovan... Chennai high court
Author
chennai, First Published Nov 30, 2021, 4:02 PM IST

முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது சில ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

defamation case dismissed against EVKS Elangovan... Chennai high court

இதனை கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

defamation case dismissed against EVKS Elangovan... Chennai high court

இந்த வழக்குகள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசியல் கட்சியினர் மீது பதிவான அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவது என முடிவெடுத்துள்ளதாக கூறி அதற்கான அரசாணைகளை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்து தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios