டெல்லியில் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் சார்பில் நடத்தப்பட்ட விழவின்போது, பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.


 
இந்த சம்பவத்திற்கு ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எங்கள் மதம் குறித்து அவதூறாக பேசியதால் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர் .

இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியும் ஜேஎன்யு வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
இதனிடையே இன்று போராட்டக் களத்துக்கு வந்த நடிகை தீபிகா படுனோனே மாணவர்களை சந்தித்து தனத அதரவைத் தெரிவித்தார். தங்களது நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு அளித்த தீபிகாவுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே நடிகை தீபிகா படுகோனேவின் இந்த செயலுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் நடித்த திரைப்படங்களை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.