Asianet News TamilAsianet News Tamil

இதற்குதான் நான் வந்தேன்... மாதவனுக்கு சம்பந்தமில்ல...! நான் பொய் சொன்னேன்..! போலி ஐ.டி அதிகாரியின் பகீர் வாக்குமூலம்...!

Deepa husband Madhavan is not associated with the income tax officer
Deepa's husband Madhavan is not associated with the income tax officer
Author
First Published Feb 13, 2018, 7:24 PM IST


வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த நபருக்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் சம்பந்தமில்லை என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேரவை ஒன்றை தொடங்கி படாத பாடுபட்டு வருகிறார். அவரது பேரவைக்குள் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றனர். 

அடிக்கடி அவருக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதைதொடர்ந்து மாதவனுக்காக டிரைவராக இருந்த ராஜா பேரவையை விட்டு தூக்கினார் தீபா. பின்னர் தற்போது மீண்டும் சேர்த்துள்ளார். 

ராஜா எண்ட்ரிக்கு பிறகு மீண்டும் கலகம் ஆரம்பித்துள்ளாது. அதாவது பிப்ரவரி 10ம் தேதி திநகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி போலீஸை பார்த்ததும் தலை தெறிக்க தப்பியோடினார்.

அவரின் புகைப்படத்தை வைத்து கொண்டு போலீசார் அவரை தேடி வந்தனர். இதுகுறித்து தீபா கணவர் மாதவனிடம் கேட்டபோது, காலையில ஐந்தரை மணியிலிருந்து வீட்டு வாசல்ல அந்த நபர் நிற்கிறதா செக்யூரிட்டி சொன்னார். பட் நான் ஏழு மணிக்குதான் அவரை பார்த்தேன்.அடையாள அட்டையெல்லாம் காண்பிச்சார். மித்தேஸ்குமார் அப்படின்னு அதுல பெயர் இருந்துச்சு. இதையெல்லாம் செக் பண்ணிட்டுதான் உள்ளே வரச்சொன்னேன்.இந்த நேரத்துல எங்க அட்வோகேட்டையும் வரச்சொன்னேன். வந்து விசாரிச்ச அட்வோகேட்டுக்கு டவுட் வந்துடுச்சு. அதனாலதான் அவரு போலீஸுக்கு போன் பண்ணினார். போலீஸும் வந்து அவரை விசாரிச்சுட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு சத்தம்! தப்பிச்சு ஓட ஆரம்பிச்சுட்டார்.இந்த சம்பவத்தை அதிர்ச்சிகரமாதான் பார்க்கிறேன் என தெரிவித்தார். 

இந்நிலையில், போலீ அதிகாரி போலீசில் சரணடைந்தார். அப்போது பகீர் வாக்குமூலத்தை வெளியிட்டார். அதாவது, சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாகவும் போலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாகவும் தெரிவித்தார். 

ஆனால் அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இன்று மேலும் பல உண்மைகள் வெளியாகியுள்ளது. அதாவது, வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த நபருக்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் சம்பந்தமில்லை என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் பறிக்க வந்ததாகவும் தீபாவின் கணவர் மாதவனை வேண்டுமென்றே சிக்க வைக்க நினைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் பிரபாகரன். மாதவனிடம் போனில் பேசியதாக கூறியது பொய் எனவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios