வரும் 12 ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் ஆர் கே நகரில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது ஆனால், பண பட்டுவாடா நடைபெற்றதை உறுதி செய்த இந்திய தேர்தல் ஆணையம், ஆர் கே நகர்  தேர்தலை ரத்து செய்து நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஜெயலிதாவின் அண்ணன் மகள்தீபா, ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து செய்தது குறித்த தன் கருத்தை தெரிவித்தார்.
  
அப்போது, செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விக்கு பதிலளித்த தீபா, அதிமுக அம்மா வேட்பாளர்  டிடிவி  தினகரனை பற்றி கருத்து தெரிவித்தார்.அதன் படி, தினகரன் போட்டியிட வாய்ப்பே  கொடுத்திருக்க கூடாது  என்றும்,  ஜெயலலிதாவின் மரணத்திற்கு  பின்னணியில்  சசிகலா  குடும்பம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், இது போன்று பண  பட்டுவாடா செய்து ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற  நினைப்பது  நியாமற்றது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக அம்மா கட்சிப் வேட்பாளர்  தினகரனால் நேர்மையாக வெற்றி பெற முடியாது என்றும் போட்டு  தாக்கினார் தீபா. 

மேலும், பண பலம் மட்டுமே வெற்றி  வாய்ப்பினை தேடி தராது என்றும்,மக்கள்  பலமே  வெற்றியை நிர்ணயிக்கும் எனவும்  ஜெயலிதாவின் அண்ணன்  மகள்  தீபா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.