deepa warning dc saravanan in poes garden
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பின்னர், வெளியே வந்த தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் தன்னை குண்டர்கள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார். மேலும், காலை முதல் தன்னை, தீபக் போன் செய்து அழைத்தார். இங்கு வந்தேன் என கூறினார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இணை கமிஷனர் சரவணன், தீபா மற்றும் மாதவனை சமாதானம் செய்து, அங்கிருந்து புறப்படும்படி கூறினார்.

உடனே தீபா, “ஏய் மரியாதையா பேசு நீ... என் புருஷன்கிட்ட வா.. போ... எல்லாம் பேசுற..” என கேட்டார். உடனே துணை கமிஷனர் சரவணன், “யார் மேடம்” என கேட்டார்.
அதற்கு, “மாதவன் என் ஹஸ்பண்டு.. அவ்ளோதான் சொல்லிட்டேன்.. உங்களை எல்லாம்... அவரை அடிக்கும் போது எங்க போயிருந்தீங்க” என்றார்.
உடனே, அவரும் “எனக்கு தெரியும் மேடம்... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் இங்கே இருக்கேன்..” என கூறி சமாளித்தார்.
