ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக அரசு அமைக்ககூடாது எனக்கு அதிமுக தொண்டர்கள் தமக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெ.தீபா.

போயஸ் கார்டன் இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல உலக அரங்கில் உள்ள தலைவர்களை யெல்லாம் உச்சரிக்க வைத்த பெயர் இது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி சினிமாவில் நடித்த போதும் சரி போயஸ் கார்டன் என்கிற பெயர் ஜெயலலிதாவால் பெருமை சேர்ந்து. ஜெயலலிதா சினிமாவில் நடித்த போது தன்னுடை சுயவருமானத்தில் கஷ்டப்பட்டு வாங்கினார். அதன் பிறகு முதல்வரானார். அதன் பிறகு போயஸ் கார்டன் முழுபாதுகாப்பு வளையத்தில் இயங்கியது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு போயஸ் கார்டனில் சசிக்கலா இருந்தார். இங்கே சசிகலா இருக்க கூடாது இந்த சொத்து எங்களுக்கு சொந்தமானது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இவரது தம்பி ஆகியோரை வைத்து வழக்கு போடவைத்தார்கள் அதிமுகவில் சிலர்.


ஜெயலலிதாவிற்கு உறவுகள் இருந்தாலும் இந்த சொத்தை அவர் யாருக்கு உயில் எழுதினார் என்பது மர்மமாகவே இருக்கிறது. 
இந்த நிலையில் தான் ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசு கையகப்படுத்தி நினைவிடமாக மாற்ற சட்டசபையில் தீர்மானம் போட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதைசெயல்படுத்தப்போவதாக தற்போது முதல்வர் அறிவித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெ.தீபா..  "அதிமுக தொண்டர்கள் தமக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். போயஸ் தோட்டத்தில் நினைவில்லம் வேண்டாம் என்று ஆளுநர், முதல்வருக்கு தொண்டர்கள் கடிதம் எழுத கோரிக்கை விடுத்துள்ளார்.