தமிழக மக்களின் கருத்துக்களையே நடிகர் கமல் ஹாசன் பிரதிபலிப்பதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். 

இது குறித்து தீபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு முற்றிலும் செயல் இழந்த பொம்மை அரசாக செயல்படுகிறது. மக்கள் சக்தியே ஜனநாயகத்தின் மிகப்பெரிய சக்தி.

தற்போதுள்ள அமைச்சர்களை மக்கள் விரைவில் தூக்கி எறியபோவதாக கூறியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படும் காலம் வர உள்ளது.

தமிழக மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் கமல்ஹாசனை கடுமையாக தாக்கி பேசும் அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், ஜனநாயக நாட்டில் கமல்ஹாசன் போன்றவர்களின் கருத்துக்கள் தொடர்ந்து வெளி வரவேண்டும்.

இவ்வாறு தீபா அறிக்கையில் கூறியுள்ளார்.