முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா – ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, விரைவில் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருந்தார். அதுபற்றி பிப்ரவரி 24ம் தேதி (இன்று) அறிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து புறப்பட்ட தீபா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு 3 முறை வலம் வந்த அவர், நினைவிடத்தில் விழுந்து வணங்கிவிட்டு மீண்டும் தி.நகர் வீடு திரும்பினார். அப்போது, தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் சாதனைகளையும், சோதனைகளையும் நாம் நினைத்து பார்க்க வேண்டிய நாள் இது. இந்த நாளை நாம் கொண்டாடும்போது, ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். விரைவில் இரட்டை இலையை மீட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.