சசிகலாவின் அராஜக கூட்டத்தை விரட்டியடிப்போம்…ஆதரவாளர்களிடம் தீபா உறுதி…

தமிழக மக்களையும், அதிமுகவையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என ஜெ., அண்ணன் மகள் தீபா தனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவை ஏற்கவில்லை,

ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக விற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் நாள்தோறும் தீபாவின் வீட்டிற்கு ஆயிரக்கணக்கான தொண்டைர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய ஓபிஎஸ் தீபாவுடன் இணைந்து செயப்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்கள் மத்தியில் தீபா நேற்று பேசினார். அப்போது எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெ., வழியில் மீண்டும் நல்லாட்சி மலரும் நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழக மக்களையும், அதிமுகவையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவது தான் எனது ஒரே லட்சியம் என்றும் அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தீபா கேட்டுக் கொண்டார்.

என்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவேன் என்றும் ஜெயலலிதா வழியில் நடப்பேன் என்றும் தீபா உறுதியளித்தார்..