ஆர்.கே நகரில் நிற்பது உறுதி...! கட்டுக்கடங்காத கூட்டம்.... களத்தில் குதித்தார் தீபா .....!!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தீபா :

வருவாரா வர மாட்டாரா ? களத்தில் குதிப்பாரா குதிக்க மாட்டாரா ? என்ற பல கேள்விகள் ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபாவை நோக்கி எழுப்பப்பட்டு வந்தன.

“வந்துட்டேன் சொல்லு”

“வந்துட்டேன் சொல்லு” என்ற ரீதீயில், களத்தில் குதித்தே விட்டார் தீபா, யாருக்கும் தெரியாமல் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று தீபாவே பேட்டியில் சொன்ன பிறகு தான் , மக்கள் பிரச்சனைக்கான போராட்டத்தில் கலந்துக்கொண்டது தெரிய வந்தது. அது முன்னறிவிப்பின்றி நடந்த ஒரு நிகழ்வாகும். ஆனால் பேரரிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று “ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக’ ஆர்கே நகருக்கு சென்றார் தீபா...

ஆர். கே நகர் :

தனது அத்தை நின்று வெற்றி பெற்ற தொகுதியான ஆர். கே நகரில், தனக்கு அதிக செல்வாக்கு உள்ளது என , தனது ஆதரவாளர்கள் சொல்லி வருவதை நேரில் பார்க்கவும், அதே நேரத்தில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, வீரபத்ரன் அனாதை இல்லத்திற்கு சென்று, அங்கு ஆதரவற்றோரை சந்தித்தார் தீபா.

அத்தையின் போக்கில் தீபா :

பொதுவாக , ஜெயலலிதா எங்கு சென்றாலும், அங்கெல்லாம் தன்னிச்சையாகவே மக்கள் கூட்டம் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு கூட்டம் இல்லையென்றாலும் கூட, “அரசியலுக்கு வரப்போகிறேன்” என அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடாத தீபாவிற்கு கூடிய கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் . சில இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட தீபாவுக்கு மக்களின் ஆதரவு, மகிழ்ச்சியையும் புதிய தெம்பையும் அளித்துள்ளது. இதனால் காலியாக உள்ள தனது அத்தையின் வெற்றி தொகுதியான ஆர்கே நகரில் போட்டியிட தீபா கிட்டத்தட்ட முடிவு எடுத்து விட்டதாக தெரிகிறது.

அண்ணா நினைவு நாள் :

எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று , அவருக்கு மரியாதை செலுத்த வெளிவந்த தீபா, தற்போது இரண்டாவது முறையாக அண்ணாவிற்காக வெளியே வந்துள்ளார்.

இந்த நிகழ்வு , அத்தை ஜெயலிதாவின் செல்வாக்கை அப்படியே அறுவடை செய்துக்கொள்ளும் நோக்கில், தெளிவான பாதையில் தீபா செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.