தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். 100 வது நாள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில்  13 பேர் பலியாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த ஆலையை பூட்டி சீல் வைத்தது. 

இதையடுத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க அனுமதி கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியதால் தீர்ப்பாயம் அனுமதி கொடுத்தது.  இதற்கு தமிழகமே கடும் கொந்தளிப்பில் உள்ளது. மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கியது.

இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என வந்த தீர்ப்பிற்கு எதிராக ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் போராளிகள் முட்டாள்கள் என கூறிய பாஜக மாநில தலைவர் தமிழிசையின் உருவ போஸ்டரில் அவரது வாயை ஊசியை வைத்து தைத்து நூதன போராட்டம் நடத்தினர். இந்த வீடியோவானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.