Deepa mutalvarakkiye acquire Shashikala party hindered my development - will be screaming with Madhavan

தீபாவை முதலமைச்சராக்குவதே என் முதல் கடமை என்றும், என்னுடைய வளர்ச்சிக்கு சசிகலா தரப்புதான் இடையூறு செய்கின்றனர் எனவும் தீபா கணவர் மாதவன் கூறியிருப்பது அடுத்தகட்ட குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில் தற்போது தீபா கணவர் மாதவன் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என அவர்கள் தரப்பு ஆதரவாளர்களே குழம்பி போய் உள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன் வைத்தவர் தீபா. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தரப்பை விட தீபாவிற்கு மக்களிடமும் அதிமுக தொண்டர்களிடமும் பெரிதும் ஆதரவும் இருந்ததாகவே சொல்லலாம்.

அந்த அளவிற்கு தீபா பொறுமையுடனும் உறுதியான நிலைபாடுடனும் செயல்பட்டு வந்தார்.

சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதால் தீபாவும் ஒ.பி.எஸ்சுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தீபா தனது ஆதரவளார்கள் தனித்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதால் தான் தனி அமைப்பு உருவாக்க போவதாக அறிவித்தார்.

மேலும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார்.

அதுவரை தீபாவிற்கு பக்கபலமாக இருந்த அவரது கணவர் மாதவன் திடீரென அனைத்து அதிமுக அரசியல்வாதிகளின் பாணியில் ஜெ. சமாதிக்கு வந்து வணங்கி விட்டு புது கட்சி தொடங்க போவதாக அறிவித்தார். தீபா பேரவையை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார்.

இவரின் அறிவிப்பு தீபாவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் தீபா, சசிகலாதான் என் கணவரை எனக்கு தூண்டி விடுகிறார் என்ற குற்றசாட்டை எழுப்பினார்.

இதைதொடர்ந்து மாதவன் தீபாவை முதல்வராக்குவதற்காகவே தனிக்கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.

இருவர் வாக்குமூலத்திற்கும் இடையே பெரும் முரண்பாடு இருப்பதால் தீபா பேரவையில் உள்ள நிர்வாகிகள் பலர் ஒ.பி.எஸ் தரப்பிடம் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் தீபா பெரும் மனம் வருத்தத்தில் உள்ளாராம்.

இந்நிலையில், தீபா கணவர் மாதவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

தீபாவை சுற்றி சதிகாரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

தீபாவிற்கு நான் துரோகம் செய்யவில்லை.

என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத சிலர் என்னை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.

மார்ச் 23 ஆம் தேதி பேரணியாக சென்று தீபா வேட்பு மனு தாக்கல் செய்வார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு கூட நான் போட்டியிட முடியும்.

எனக்கு பதவி ஆசை இல்லை, தீபாவை முதல்வராக்குவதே என் முதல் கொள்கை.

என்னுடைய வளர்ச்சிக்கு சசிகலா தரப்புதான் இடையூறு செய்கின்றனர்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீபாவை முதல்வராக்குவது தான் என் முதல் கடமை என்று சொல்பவர் எதற்காக தீபா பேரவையை விட்டு வெளியேறி விட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார் என்றுதான் மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்.

விளக்குவாரா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்....