முதலமைச்சர் பன்னீர்செல்வம் திடீரென தனது வீட்டை விட்டு கிளம்பினார். அப்போது எல்லோரும் ஆளுநர் மாளிகை நோக்கி செல்கிறார் என நினைத்து கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் மெரினாவை நோக்கி சென்றது ஒ.பி.எஸ்ஸின் வண்டி. அங்கு சென்ற முதலமைச்சர் பன்னீரும் பாண்டியராஜனும் வரிசை கட்டி நின்றனர்.

அப்போதே புரிந்து விட்டது அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தாயாகுகிறார் பன்னீர்செல்வம் என்பது. 5 நிமிட இடைவேளைக்கு பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வந்து இறங்கினார்.  தீபாவின் வருகை அதிமுக தொண்டர்களை உற்சாகபடுத்தியது.

வழக்கமாக சுடிதார் அணிந்து வரும் தீபா தற்போது ஜெயலலிதா போலவே சேலை அணிந்து உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு வந்தார். ஜெயலலிதா தொனியிலேய தீபா வந்ததை பார்த்து அதிமுகவினர் கரகோஷம் எழுப்பினர்.

பின்னர் ஒ.பி.எஸ்ஸை சந்தித்து பேசிவிட்டு இருவரும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஒ.பி.எஸ் தீபா ஒன்றாக இணைந்திருப்பதால் அவர்களது அரசியல் பயணம் ஒன்றாக இணைந்து செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.

இருவரும் கைகோர்த்திருப்பது சசிகலா  தரப்பை அதிர்சியடைய செய்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, பன்னீர்செல்வமும் தானும் ஒரே கருத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.