deepa is lying says pugazhendhi
போயஸ் கார்டன் வருமாறு தன்னை அழைத்து தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது கணவர் மாதவனை கொலை செய்ய முயற்சிகள் நடப்பதாக தொலைக்காட்சியில் தெரிவித்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபாவின் இக்குற்றச்சாட்டுகளுக்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று பின்னர் போயஸ் கார்டனுக்கு வரும் மக்கள் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். இது தான் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கையில் போயஸ் கார்டனுக்கு சென்ற தீபாவை ஏன் தடுக்க வேண்டும். அவரை யாரும் தடுக்கவில்லை.

வேண்டும் என்றே திட்டமிட்டு ரவுடிக் கும்பலுடன் நுழைந்து பிரச்சனையை உருவாக்கி தீபா அரசியல் செய்கிறாரா். இப்படி எல்லாம் செய்தால் ஜெயலலிதாவின் பெயர் கெட்டுவிடும் என்பது அவருக்குத் தெரியாதா? போயஸ் கார்டனுக்குச் சென்ற தீபாவை யாரும் தடுக்கவில்லை...! தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது." இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.
