After the demise of his niece Deepa AIADMK party activists saw this as Daystar.

ஜெ. மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை அதிமுகவின் விடிவெள்ளியாக பார்த்தனர் அக்கட்சியின் தொண்டர்கள்.

அதற்கேற்றாற்போல் தொடர்ந்து ஆரவாரங்களை எழுப்பியபடி பல்லாயிரக்கனக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் பல முக்கிய பிரமுகர்கள் பேரவையில் இணைந்தனர். சூட்டோடு சூடாக தீபா எந்த முடிவும் எடுக்காதாதால் பலர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தனர்.அப்போதே தீபா பேரவை கலகலக்க தொடங்கியது.

ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். அதற்கான நிர்வாகிகளையும் அறிவித்தார்.

அதில் தங்கள் நீண்ட நாள் நண்பரான ஏ.வி.ராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோரை தலைவர் செயலாளராக நியமித்தார்.

இது அவரது கணவர் மாதவனுக்கு அறவே பிடிக்கவில்லை. ஆரம்பம் முதலே கூறி வந்தபடியே ஏ.வி.ராஜாவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

அதன் பின்னர் நடந்த வாக்குவாதங்களுக்கு பஞ்சமே இல்லையாம். அடிதடி மட்டும்தான் இல்லை அந்தளவுக்கு தீபா அவரது கணவர் மாதவன் பொறுப்பில் இருந்து நீக்கபட்ட ராஜா கோஷ்டியினரிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டதாம்.

இந்த தொடர் நடவடிக்கைகளால் தீபா கணவர் மாதவன் அரசியலையே வெறுத்து போய் விட்டாராம்.

“கடந்த 3 மாதங்களாக தீபாவுடன் இருந்து தொண்டர்களின் விருப்ப படி செயல்பட்டேன்.

இருவரும் இணைந்து நல்ல முடிவுகளை எடுத்து வந்தோம்.

ஆனால் இன்று நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.

ஓபிஎஸ்சை சந்தித்தது,பேரவை பொறுப்பாளர்களை அறிவித்தது, இது எதுவுமே எனக்கு தெரியாது.

இவையனைத்துமே தீபாவின் தனிப்பட்ட செயல்பாடுதான் என அதிரடியாக மாதவன் தெரிவித்தார்.

தீபாவின் பாதுகாப்புக்காகவே ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.

பொறுப்பாளர் பட்டியலில் இருந்த ஒருவரை கூட எனக்கு தெரியாது

தீபா தனிப்பட்ட முறையிலேயே நன்றாக செயல்படுவதால் இனி ஜெ. தீபா பேரவை செயல்பாடுகளில் நான் இனி அறவே செயல்படமாட்டேன்.

தீபா தன் சிறப்பான செயல்பாடுகளால் நல்ல நிலையை எட்டவேண்டும்” என அவரது கணவர் தெரிவித்தார்

மாதவனின் இந்த திடீர் முடிவால் தீபா போட்டோக்களில் அவரை இனி பார்க்கமுடியாது என்றே தெரிகிறது.