deepa entered in poes garden
தனது அத்தை ஜெயலலிதாவின் சொத்தை மீட்கும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டேன் என அவரது அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டனில் தர்ணா நடத்தி வருகிறார். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகள் தீபா, அரசியலில் குதித்தார். அப்போது, தனது அத்தையின் சொத்தை சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் அபகரிப்ப முயற்சிப்பதாகவும், கட்சியிலும் அவர்கள், ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் உள்பட அனைத்து சொத்துக்களும் தங்களுக்கே சொந்தம் என கூறினார். ஆனால், அற்கான எவ்வித ஆவணமும் யாரிடம் உள்ளது என இதுவரை தெரியாமல் இருக்கிறது.
இதற்கிடையில் தீபாவின் அண்ணன் தீபக், ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களின் பத்திரமும் தன்னிடம் உள்ளது. அந்த சொத்துக்கள் தனக்கும், தீபாவுக்கு மட்டுமே சொந்தம் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். இதனால், மேலும் பரபரப்பானது.

இந்நிலையில் தீபா, தனது அத்தை ஜெயலலிதாவின் சொத்துக்களை மீட்க வேண்டும் என கூறி, தற்போது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர் தன்னுடன், கட்சி ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மேலும், அங்குள்ள சசிகலா தரப்பினருக்கும், தீபா ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
