75 லட்சத்த ஆட்டையை போட்ட பேபிம்மா..!! அம்மா சொத்து வரும், உங்க பணத்தை செட்டில் பண்ணுவேன்ன்னு ப்ராமிஸ்...

ஜெ.வின் சொத்து வந்து விட்டால் மொத்த பணத்தையும் செட்டில் செய்து விடுவேன்' என்று வாக்குறுதி கொடுத்துள்ளாராம் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை தலைவி தீபா.
 

Deepa criticised about her party members

ஜெ.வின் சொத்து வந்து விட்டால் மொத்த பணத்தையும் செட்டில் செய்து விடுவேன்' என்று வாக்குறுதி கொடுத்துள்ளாராம் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை தலைவி தீபா.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அதிமுக வைக் காப்பாற்றப் போவதாக கிளம்பி, ஓரங்கட்டப்பட்டதால் புதிய கட்சியை ஆரம்பித்து, அந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியாமல் கலைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் ஜெ.தீபா. தொண்டர்கள் கொடுத்த தொந்தரவுதான் இந்த முடிவுக்குக் காரணமென்று தனது ஃ பேஸ் புக்கில் பதிவிட்டிருந்த தீபா, அரசியலுக்கு வந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

Deepa criticised about her party members

என்னை வழி நடத்த சரியான நபர்கள் யாருமில்லை. இனிமேல் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன். என் வீட்டின் முன்நின்று கட்டாயப்படுத்தியதாலேயே அரசியலில் நுழைந்தேன், ஜெ.வின் சொத்துக்கு நான் ஒரு நாளும் ஆசைப்பட்ட தில்லை என பதிவிட்டிருந்தார். 

தீபாவின் இந்த பேட்டியை மொத்தமாக மறுக்கும் எம்.ஜி.ஆர் , அம்மா தீபா பேரவை'யின் நிர்வாகிகள், கட்சிக்காக பணத்தைக் கொட்டியவர்களின் நிலையை யோசிக்காமல் தீபா இந்த முடிவை எடுத்திருக்கிறார்' என்று குற்றம்சாட்டுகின்றனர்.

Deepa criticised about her party members

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈ.சி.ஆர். ராம சந்திரன், பல பொய்களைச் சொல்லி ரூ.75 லட்சத்தை வாங்கி தீபா ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். இவரைப் போலவே பணத்தைக் கொட்டியவர்கள் ஒன்றுகூடி கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதுதான், கட்சியைக் கலைக்கும் நெருக்கடிக்கு தீபாவைத் தள்ளியிருக்கிறது. 

ஜெ.வின் சொத்து வந்துட்டா உங்க மொத்த பணத்தையும் செட்டில் செஞ்சிடுவேன் என்று வாக்குறுதி தந்திருக்கிறாறாரம் தீபா. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அனுபவிக்கும் சொத்துகள் அனைத்துமே, ஜெ.வால் சம்பாதிக்கப் பட்டவை என்று குறிப்பிட்டார். தற்போது "அந்த சொத்துகளை எம்.ஜி.ஆரின் சொத்துகளைப் போலவே அரசே பராமரித்தால் என்ன செய்வது என்பதால் புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios