ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே தகுதியை வைத்து புதிய கட்சி தொடங்கியவர் தீபா. தொடக்கத்தில் அவரைப் பார்க்க அதிமுக தொண்டாகள் குவிந்தனர். அவரதுக்கு அதிமுகவினரும் பெரும் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அவருக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை போன்ற பல காரணங்களால் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.
 

இந்நிலையில் தனது கணவரை தீபா கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அஇஅதிமுக ஜெ.தீபா மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து மாநில நிர்வாகிகளும் கழக உறுப்பினர்களும் மாதவனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் தீபா கட்சியில் மாநில அளவிலான பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க திணறி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.