உலகத்திலேயே கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து பரிசோதனைகளை அதிகப்படுத்தியது. தமிழ்நாடு தான் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.தமிழகத்திலேயே முதல் முறையாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக "கொரோனா இல்லாத தண்டையார்பேட்டை" எனும் புதிய திட்டத்தை தண்டையார்பேட்டை மண்டலத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கிவைத்தார். இதுகுறித்து மருத்துவர் குழு,  தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "18 வது நாளாக சென்னையில் தொற்று குறைந்து கொண்டு வருகிறது. தொற்று பாதித்தவர்களில் 70% இருந்த தொற்று தற்போது 29% ஆக உள்ளது.தற்போது கொரோனா இல்லா தண்டையார்பேட்டை எனும் புதிய திட்டத்தை 38 வது வார்டில் துவக்கியுள்ளோம். தொண்டு நிறுவனங்களின் உதவியோடு Www.ajmf.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. ஜுலை 31 க்குள் கொரோனா இல்லா பகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தன்னார்வலர்களுக்கு ஊதிய பிரச்சனை விரைவில் களையப்படும். 

சமூக பரவல்  விகிதத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனி யுக்தியை உபயோகப்படுத்துகின்றனர். தமிழகத்தில் இதுவரை சமூக பரவல் இல்லை. இறப்பு விகிதத்தை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் தான் இறப்பதாக தகவல்கள் காட்டுகின்றன.தமிழகத்தில் பிளாஸ்மா தானத்தை தானகவே வந்து அளிக்கின்றனர். அவர்களுக்கு தேவையெனில் அசாம் அமல்படுத்தியுள்ள திட்டத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். தமிழகத்தில் எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.