Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் கடன் சுமை ரூ.4,56,660 கோடி... பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது 2,000 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் சுமை தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ரூ.4,56,660 கோடியாக   கோடியாக அதிகரித்துள்ளது.

Debt of Tamil Nadu Rs.4,56,660 crore...panneerselvam announcement
Author
Tamil Nadu, First Published Feb 14, 2020, 11:16 AM IST

தமிழக சட்டப்பேரவையில் 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது 2,000 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் சுமை தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ரூ.4,56,660 கோடியாக   கோடியாக அதிகரித்துள்ளது.

Debt of Tamil Nadu Rs.4,56,660 crore...panneerselvam announcement

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த 1984-85-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 2,129 கோடி ரூபாயாக இருந்தது. கருணாநிதி ஆட்சியில் இருந்து விலகிய 2000 - 01-ம் நிதியாண்டில் 28,685 கோடி ரூபாய் தமிழக அரசின் கடனாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய 2006-ம் ஆண்டு கடன் சுமை 57,457 கோடியாக அதிகரித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் போது அரசின் கடன்சுமை 101439 கோடியாக உயர்ந்தது.

Debt of Tamil Nadu Rs.4,56,660 crore...panneerselvam announcement

2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக இருந்தது. 2013-14-ம் நிதியாண்டில் 1,40,041 கோடியாக இருந்தது. 2014-15-ம் நிதியாண்டில் 1,95,290 கோடியாக இருந்தது. 2015-16-ம் நிதியாண்டில் 2,11,483 கோடியாக இருந்தது. இந்நிலையில், 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்து கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக இருந்தது. 2020-21-ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு ரூ.4,56,660 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios