Asianet News TamilAsianet News Tamil

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தள்ளிபோகுமோ.!! தாய் ஆஷாதேவி அச்சம்.!!?

மூன்று முறை தூக்கு தண்டனைக்கான தேதி குறிக்கப்பட்டு அந்த தேதியில் எதுவுமே நடக்காமல் தூக்கு தேதி தள்ளி போனது தான் மிச்சம். நான்காவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேதியும் மாறுமோ என்கிற அச்சம் ஆஷாதேவிக்கு ஏற்பட்டிருக்கிறது.

Death penalty for Nirbhaya case Mother Ashadevi fears. !!
Author
Delhi, First Published Feb 17, 2020, 11:56 PM IST

T.Balamurukan
மூன்று முறை தூக்கு தண்டனைக்கான தேதி குறிக்கப்பட்டு அந்த தேதியில் எதுவுமே நடக்காமல் தூக்கு தேதி தள்ளி போனது தான் மிச்சம். நான்காவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேதியும் மாறுமோ என்கிற அச்சம் ஆஷாதேவிக்கு ஏற்பட்டிருக்கிறது.

Death penalty for Nirbhaya case Mother Ashadevi fears. !!

நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டெல்லி  அரசு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூDeath penalty for Nirbhaya case Mother Ashadevi fears. !!

கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுவதற்கான தேதியை வெளியிட்டு, நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்திருக்கிறது. திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி வினய் ஷர்மா உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். இதையடுத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வினய் ஷர்மாவின் உடல்நலனை கவனிக்குமாறு சிறைதுறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. பவன் குப்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கவும், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். இன்னொரு குற்றவாளி அக்சய் குமார் தரப்பில், குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பத் தயாராகி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Death penalty for Nirbhaya case Mother Ashadevi fears. !! 

 நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கில் புதிய தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது..,'
 'மூன்றாவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் எனக்கு எவ்வித சந்தோசமும் இல்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். எனவே இறுதியாக மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். குற்றவாளிகள் மார்ச் 3-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios