* ராஜிவ்காந்தியின் கொலைக்கு தி.மு.க.வே காரணம்னு காங்கிரஸ் குற்றம் சாட்டிட்டேஇருந்துச்சு. ஆனா அதே தி.மு.க.வோடு கூட்டணி வெச்சிருக்காங்க இப்ப. சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவில்லையா?: அருண்ஜெட்லி. (தல, ராஜிவ் கொலை வழக்குல தீர்ப்பு எப்பவோ வந்து, அது ‘தி.மு.க.வுக்கு இதில் தொடர்பு இல்லை’ன்னும் சொல்லிடுச்சு. ஆனா இம்புட்டு வருஷம் கழிச்சு நீங்க இன்னமும் அவுடேட்டட் விஷயத்தை வெச்சுக்கிட்டு அரசியல் பண்றேன்னு சீன் பண்றதை பார்த்தால் கோபமில்லை, செம்ம காமெடியா இருக்குது.)

* தெலுங்கானா முதல்வர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்கலாம். விரைவில் அவரை தமிழகம் தனது முதல்வராக்கி காட்டும்: கனிமொழி. (யார் வேணா, எப்ப வேணா அண்ணனை பார்க்கலாம். ஆனா உங்களுக்கு மட்டும் அப்பப்ப உள் அரசியல் ஆணியடிச்சு ஆதங்கப்பட வெச்சிடுவாரு இல்லீங்களா சகோதரி?)

* மோடியிடம் தன் மகனின் வெற்றிக்காக பன்னீர் கெஞ்சியிருக்கலாம். இதனால் தேனி தொகுதியில் பெட்டி மாற்றும் வகையில் நடவடிக்கைகள் இருந்திருக்கலாம். இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேனி தொகுதி மக்கள் கொந்தளித்து விடுவர்: இளங்கோவன். (க்கும், ஏம்ணே நீங்க வேற, நேரங்காலம் புரியாம காமெடி பண்ணிட்டு இருக்கீக? கொந்தளிக்கிறதுன்னா இவிய்ங்க எப்பவோ, எதுக்கோ கொந்தளிச்சிருக்கணும்பே)

* நிதி நிறுவன மோசடி மூலம் ஏழை மக்களின் வயிற்றில் அடித்த தன் சகாக்களை அறைய மம்தாபானர்ஜிக்கு தைரியம் இருக்கிறதா?: நரேந்திர மோடி. (அந்த நிதி நிறுவன மோசடி வழக்குல முக்கிய தலையா உருட்டப்பட்ட முகுல் ராய் இப்ப உங்க கட்சியிலதானே இருக்காரு ஜி! அவரை அறைய உங்களுக்கு கெத்து இருக்குதான்னு தீதி திருப்பிக் கேட்டாக்க எங்கூட்டு போய் முகத்த வெச்சுப்பீங்க டியர் பிரதமர்?)

* ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன் ஆறு முறை சம்மன் அனுப்பியும் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. எங்கள் ஆட்சி வந்ததும், ஜெ., மரணம் குறித்து விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவதுதான் என் முதல் வேலை: ஸ்டாலின். (தலைவரே, அப்படியே அந்த அண்ணாநகர் ரமேஷ் குடும்பம் மர்மமா செத்த வழக்கு, தா.கிருட்டிணன் வழக்கின் உண்மை குற்றவாளிகள், சாதிக்பாட்ஷா தற்கொலை வழக்கு, தினகரன் எரிப்பு வழக்கில் மிச்சமிருக்கும் உண்மை, பொட்டு சுரேஷ் கொலையின் ரியல் பின்னணி நபர்கள், அப்புறம் லேட்டஸ்டா மார்ட்டின்  நிறுவன ஊழியர் பழனிசாமியின் மர்ம மரணம் இவற்றையும் சேர்த்து விரிவா விசாரிச்சு, உண்மை குற்றவாளிகளை உள்ளே தள்ளியே தீரணும். செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா?)