Asianet News TamilAsianet News Tamil

ஜி.கே வாசன் வீட்டு வாசலில் சடலம்.. போலீசார் பயங்கர அதிர்ச்சி.. கொலையா.. இயற்கை மரணமா.? தீவிர விசாரணை.

காங்கிரஸ் கட்சியில் இருந்த போது மத்திய அமைச்சராகவும், டெல்லியில் மதிப்பு மிக்க தலைவராகவும் வலம் வந்தார் அவர். தற்போது தனியாக கட்சி அரம்பித்து அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வருகிறார். 

Dead body found MP GK Vasan house doorstep.. DelhI police Inquiry.
Author
Chennai, First Published Oct 14, 2021, 1:27 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வீட்டு வாசலில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வீட்டு வாசலில் சடலம்  கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும், தற்போது மாநிலங்களவை எம்பியாகவும் இருந்து வருகிறார் ஜி.கே வாசன். 

Dead body found MP GK Vasan house doorstep.. DelhI police Inquiry.

இதையும் படியுங்கள்: மக்களே அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருப்பது நல்லது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த போது மத்திய அமைச்சராகவும், டெல்லியில் மதிப்பு மிக்க தலைவராகவும் வலம் வந்தார் அவர். தற்போது தனியாக கட்சி அரம்பித்து அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜி.கே வாசன் வீட்டு வாசலில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது எம் பியாக உள்ள ஜி.கே  வாசனுக்கு டெல்லி அசோகா சாலையில் உள்ள பட்டேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

Dead body found MP GK Vasan house doorstep.. DelhI police Inquiry.

இதையும் படியுங்கள்: அதிமுக போட்டது தப்புக்கணக்கு. எதிர் கட்சி என்ற குறைந்த பட்ச மரியாதை கூட மக்கள் தரல.. பங்கம் செய்த ஸ்டாலின்.

இந்நிலையில் அவரின் வீட்டு வாசலில் நேற்று காலை 60 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது, அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சடலம் எம்.பி வாசன் வீட்டு வாசலில் கிடந்ததால் டெல்லி போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்து கிடந்த முதியவர் யார், எங்கிருந்து வந்தார், அவர் எப்படி உயிரிழந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios