DDV Dinakaran will be the Chief Minister Edappadi Palinasamy as the coalition with the Panneer team
பன்னீர் அணியுடன் கூட்டணி வைத்தது போல் டிடிவி தினகரன் அணிக்கும் எதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்வார் எனவும் அனைவரையும் அனுசரித்து செல்பவர் எடப்பாடி பழனிசாமி எனவும், அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெ ஜெவென கூட்டம் அலை மோதியது. இதில் மிகவும் மிரண்டு போன எடப்பாடி அணி விரைவில் அணிகளை இணைக்க வேண்டும் என விரும்பியது.
நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார்.
மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் வைத்தியலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார்.
இதைதொடர்ந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
இந்நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என கூறிய வைத்தியலிங்கம் எம்.பியை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய வைத்தியலிங்கம் என்னை கட்சியில் இருந்து நீக்க டிடிவிக்கு உரிமையில்லை என தெரிவித்தார்.
இதனிடையே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இந்நிலையில் செய்தியாளரகளை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, பன்னீர் அணியுடன் கூட்டணி வைத்தது போல் டிடிவி தினகரன் அணிக்கும் எதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்வார் எனவும் அனைவரையும் அனுசரித்து செல்பவர் எடப்பாடி பழனிசாமி எனவும் தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் விரைவில் எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க கொண்டு வந்த தீர்மானத்துக்கு மறுப்பு தெரிவித்த 3 அமைச்சர்களில் செல்லூர் ராஜுவும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.
