DDV Dinakaran is in the vicinity of the RK Nagar intermediate election today.

சென்னை ஆர்.கே.நகர் இடை தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரன் இன்று வஉசி நகர் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்கள் இடம் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றார். 

ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். 

தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது. 

ஜெயலலிதா இல்லாத நிலையில் முதன் முதலாக ஆர்.கே.நகரில் நடைபெறும் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு முதல்வரும் துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர். 

கடந்த ஆர்.கே.நகரில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டோம். இந்த முறை ஸ்டாலின் ஆளுமையை நிரூபித்தே ஆக என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. 

துரோகம் செய்த எடப்பாடிக்கும் பன்னீருக்கும் பாடம் கற்பிக்க எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என முனைப்போடு ராவும் பகலும் வாக்கு சேகரித்து வருகிறார் டிடிவி. 

அந்த வகையில், தற்போது, சென்னை ஆர்.கே.நகர் இடை தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரன் இன்று வஉசி நகர் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்கள் இடம் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றார்.