தயாநிதி மாறன் இதற்கு பொதுமன்னிப்பு கோர வேண்டும். அவர் பேசிய அவர் பேசிய பேச்சிற்கு வருத்தம் தெரிவிப்பது ஒன்றுதான் ஒரே வழி என இரட்டைமலை சீனிவாசன் பேத்தி நிர்மலா அருண் பிரசாத் வன்மையாக கண்டித்துள்ளார். 

தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, அயோத்திதாச பண்டிதர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கொள்ளுப்பேத்தி டாக்டர் நிர்மலா அருண் பிரகாஷ் பேசுகையில், ‘’சமீபத்தில் தயாநிதி மாறன் தாழ்த்தப்பட்ட மற்றும் மூன்றாம் தர மக்கள் போன்ற வார்த்தைகளை சொல்லி இருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு எம்பியாக இருந்து கொண்டு இப்படி ஒரு கீழ்த்தரமான பேச்சை பேசுவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. தயாநிதிமாறனிடம் டி.ஆர்.பாலு கேட்கிறார் என்ன அர்த்தம் சொல்லுய்யா என்று... அதற்கு தயாநிதிமாறன் விளக்கம் அளித்தபோது’நாங்கள் என்ன மூன்றாம்தர மக்களா? தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அகங்காரமாக பேசியிருக்கின்றார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு எம்பியாக இருந்து கொண்டு பொறுப்பில்லாத பேச்சு பேசி இருப்பது கண்டிக்கத் தக்க விஷயமாகும். தயாநிதி மாறன் இதற்கு பொதுமன்னிப்பு கோர வேண்டும். அவர் பேசிய அவர் பேசிய பேச்சிற்கு வருத்தம் தெரிவிப்பது ஒன்றுதான் ஒரே வழி. இல்லை என்றால் இதற்காக அவர் நிச்சயமாக அனைத்து தரப்பு மக்களாலும் நிராகரிக்கப்படுவார். ஏற்கனவே அவர் கரம் கூப்பி மக்களிடம் வாக்கு கேட்டு அந்த மக்கள் வாக்களித்த பின்புதான் எம்பி யாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒரு தரப்பு மக்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கூறி அவர் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது’’என அவர் தெரிவித்துள்ளார்.