சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறைச்சாலையில் உள்ளார். அவர் விடுதலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவர் வருகைக்குப் பிறகு அதிமுகவில் மாற்றம் இருக்கும் என்றும் அவ்வப்போது பேச்சுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில்  சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். “சசிகலா இதுவரை வெறும் 17 நாட்கள் மட்டுமே பரோலில் வெளியே வந்திருக்கிறார். மொத்தம் 35 பரோல் நாட்கள் உள்ளன. எனவே பரோலில் 18 நாட்கள் மீதம் உள்ளன. சசிகலா சிறைக்குச் சென்ற பிப்.15ம் தேதியிலிருந்து 18 நாட்களை கழித்துவிட்டால் ஜன.27ம் தேதி சட்டப்படி விடுதலை ஆகலாம்.‌ ஆனால் நன்னடத்தை விதிப்படி இந்த மாத இறுதியிலேயே சசிகலா விடுதலை ஆவார்.” என்று ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.