Asianet News TamilAsianet News Tamil

தற்கொலை செய்துகொண்ட மாணவி திமுககாரரின் மகள்.. தொண்டனைவிட சிறுபான்மை ஓட்டு முக்கியமா.? ரவுண்டு கட்டும் பாஜக!

“மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் விஷம் குடித்து இறந்த சிறுமி லாவண்யாவின் தந்தை தீவிர திமுக உறுப்பினர். திமுக உறுப்பினர் அட்டையை தன் சட்டைப் பையில் வைத்திருப்பவர்."

Daughter of a student DMK leader who committed suicide .. Is minority vote bank is important than dmk cadre? BJP slam!
Author
Chennai, First Published Jan 22, 2022, 10:26 PM IST

பாஜக சொன்னால் மத அரசியல் செய்வதாக சொல்லும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சி தொண்டரின் மகளின் உயிர் பறிக்கக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அனுதாபம் இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைப் பள்ளியின் செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி லாவண்யா, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாற அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர். மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் எனவும்,உடனே பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.Daughter of a student DMK leader who committed suicide .. Is minority vote bank is important than dmk cadre? BJP slam!

இந்நிலையில் அப்பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக பாஜகவினர் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இதுதொடர்பாக அடுத்தடுத்து பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் விஷம் குடித்து இறந்த சிறுமி லாவண்யாவின் தந்தை தீவிர திமுக உறுப்பினர். திமுக உறுப்பினர் அட்டையை தன் சட்டைப் பையில் வைத்திருப்பவர். பாஜக சொன்னால் மத அரசியல் செய்வதாக சொல்லும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சி தொண்டரின் மகளின் உயிர் பறிக்கக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அனுதாபம் இல்லை. கண்டனம் இல்லை. ஏன்? திமுக தொண்டனைவிட, அந்தப் பெண்ணின் மரண வாக்குமூலத்தைவிட, சிறுபான்மை  ஓட்டுதான் முக்கியமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இன்னொரு பதிவில் சிபிஎம் செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். அதில், ““மாணவி லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜக-வின் முயற்சி கண்டிக்கத்தக்கது. மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கையும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்”-சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Daughter of a student DMK leader who committed suicide .. Is minority vote bank is important than dmk cadre? BJP slam!

பிரச்சினையே இல்லாத நிலையில், தவறாக எதுவும் நடக்காத சூழ்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஏன் கோரிக்கை வைக்கிறீர்கள்? அப்படியானால் இனி தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பீர்களா? மதமாற்ற நிர்பந்தம் இல்லை என உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? மாணவி இறப்பதற்கு முன் பதிவிட்ட காணொளியில் கூறியது பொய் என்கிறீர்களா? விசாரணையே துவங்காத நிலையில், மதமாற்றம் இல்லை என்று நீங்கள் கூறுவதோடு தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகூட இல்லாதது, வியப்பளிக்கிறது. வெறும் ஓட்டுக்காக ஒரு மதத்திற்கு ஆதரவாக பரிந்து பேசி மதவாத அரசியல் செய்யும் உங்களின் முயற்சியே கண்டிக்கத்தக்கது.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்., 

Follow Us:
Download App:
  • android
  • ios