கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசனை இயக்குவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசனை இயக்குவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரில் பேருந்து நிலையம் அருகே தடையை மீறி வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்சுட்டத்தில் பேசிய எல்.முருகன்;- இந்து மதம், தமிழகத்துக்கு எதிராக உள்ள தீயசக்திகளை, அடையாளம் காணும் வகையில் தொடங்கப்பட்டுள்ள, வேல் யாத்திரைக்கு பொதுமக்கள், முருக பக்தர்கள் ஆதரவு உள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசன், திமுக - ஐ.டி., பிரிவில் இருந்தவர். தற்போது, அவர்களுக்கு, திமுக தான் சட்ட ரீதியாக உதவிகளை செய்து வருகிறது. கருப்பர் கூட்டத்தை இயக்குவதே, திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான்.
மேலும், திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிட்டால், தமிழகம் குட்டிச் சுவராகி விடும். பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், குரல் கொடுக்கும் கனிமொழி, தன் கட்சி எம்.எல்.ஏ., பூங்கோதை விஷயத்தில், மவுனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். பின்னர் வேல்யாத்திரைக்கு முயன்ற பாஜகவின் தலைவர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 25, 2020, 10:43 AM IST