பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது, உச்சநீதிமன்றத்தில், 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வழக்கு தொடரப்படும் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டிநீரை தேக்கி வைக்க, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற 

அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுனர் மதிப்பீட்டு குழுவிடம் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. 



கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி பவானியின் குறுக்கே, 6 தடுப்பணைகளை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி அணை கட்ட கேரள அரசு முயற்சித்து வருகிறது.

இந்த ஆற்றின் குறுக்கே மஞ்சக்கண்டி, தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை நடத்தி வருகிறது. 

பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், கூடப்பட்டு என்ற இடத்தில் தடுப்பணைகட்ட சர்வே பணி முடிந்துள்ளது.

இதனையடுத்து, கேரள எல்லைக்குள் இடுக்கி, அணைவயல், அணைக்கல்லு, காரவாடா உள்பட மேலும் சில இடங்களில் கேரள அரசு தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதே நேரத்தில் பவானி ஆற்றின் நீராதாரத்தை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன.

இதுதவிர, 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்கு பவானி ஆறு முக்கிய காரணமாக இருக்கிறது. 

இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும்

என தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த விவகாரம் சட்டப் பேரவையில் இன்று எதிரொலித்தது. இப்பிரச்சனையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை

எடுத்து வருகிறது என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில், 

இரண்டு நாட்களில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். கேரள அரசின் இந்த முயற்சியை தடுத்தே தீருவோம் எனவும் ஓபிஎஸ் உறுதியளித்தார்.