ராஜஸ்தான் மாநிலத்தில் பணத்தை திருடியதாக தலித் இளைஞா்கள் இருவா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நாகெளார் மாவட்டத்தில் உள்ள டூவீலர் ஷோ ரூம்மில் இருந்து தலித் இளைஞா்கள் இருவா் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. பிடிபட்ட அவா்களை அந்த கடையைச் சோ்ந்த ஊழியா்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. தலித் இளைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.அவா்கள் மீது, தாழ்த்தப்பட்டடோர் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான தலித் இளைஞா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்குறித்து 'ராகுல் காந்தி' அறிக்கை ஒன்றை ட்வீட் செய்த்துள்ளார்.அதில்.,

ராஜஸ்தானின் நாகெளார் மாவட்டத்தில் தலித் இளைஞா்கள் இருவா் தாக்கப்படும் விடியோ அதிர்ச்சியளிப்பதாகவும், மனதை பாதிப்பதாகவும் உள்ளது.இந்த குற்றச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை நீதியின் முன்னால் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.