ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று கன்னியாகுமரி மாவட்டம்  வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்..

முன்னதாக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரி லால்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும்  அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்பு பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மார்த்தாண்டபுரம் - பார்வதிபுரம் மேம்பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் இன்று தொடங்கி  வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர், அப்போது , ஆளுநர்,  முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் அங்கிருந்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரமும் இருந்தார்.

அப்போதுஅஙகு வந்த பிரதமரின் பாதுகாப்பு அதிககாரிகள் தளவாய் சுந்தரத்தை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துக் சென்று அகற்றினர். 

அவர்களிட்ம் தளவாய் சுந்தரம் தான் யார் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதைக் கேட்காத அதிகாரிகள் அவரை அகற்றியது பெருத்த அவமானமாக பார்க்கப்படுகிறது.