Asianet News TamilAsianet News Tamil

வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று... 60 கிலே மீட்டர் வேகத்தில் வீசும். மீனவர்களுக்கு எச்சரிக்கை.

மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அக்டோபர் 20ஆம் தேதி  மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

Cyclone winds in the Bay of Bengal ... blowing at a speed of 60 kmph. Warning to fishermen
Author
Chennai, First Published Oct 20, 2020, 1:01 PM IST

மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும்  புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு கோயமுத்தூர் மற்றும் பல தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Cyclone winds in the Bay of Bengal ... blowing at a speed of 60 kmph. Warning to fishermen

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாககூடும். கடந்த 24 மணி நேரத்தில் சேலம் 9 சென்டி மீட்டர் மழையும்,  திருப்புவனம் (சிவகங்கை) 7 சென்டி மீட்டர் மழையும், ராஜபாளையம் (விருதுநகர்) 6 சென்டிமீட்டர் மழையும், மானாமதுரை (சிவகங்கை) ஆத்தூர் (சேலம்) பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) அரூர் (தர்மபுரி) தலா 5 சென்டி மீட்டர் மழையும், கோவிலாங்குளம் (விருதுநகர்) காட்பாடி (வேலூர்) புள்ளம்பாடி (திருச்சி) ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

Cyclone winds in the Bay of Bengal ... blowing at a speed of 60 kmph. Warning to fishermen

மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அக்டோபர் 20ஆம் தேதி  மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் அக்டோபர் 21 23 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios