விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் முதிக்கொண்டிருக்கும் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் ர.ரக்களுக்கு ரகசிய உத்தரவை போட்டுள்ளார். அதாவது கிராம அளவிலான அதிமுக நிர்வாகிகள் நேற்று அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் பாஸ் பண்ண, திமுக நிர்வாகிகளைக் குறிவைத்து அடுத்த அசைன்மென்ட்டை கொடுத்திருக்கிறார் அமைச்சர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நாளே 20 ரூபாய் வரை சுவர் விளம்பரம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. தலைமையிலிலும், வேட்பாளரையும் எதிர்பார்க்காமல் தனது கெத்தை காட்ட சொந்த காசை வாரி இறைத்து வருகிறார் சிவி சண்முகம், ஆனால் திமுகவை பொறுத்தவரை நிலைமை வேறு, அதாவது வேட்பாளரிடம் 15 லட்சம் வாங்கி பூத் செலவுக்காக 5000 கொடுத்துள்ளாராம் பொன்முடி.

இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் செயல்வீரர்கள் கூட்டத்தை மாநாடு போல நடத்தி, திமுக தொண்டர்களை ஏங்கவைக்கும் அளவிற்கு தடபுடல் கறி விருந்து,  கரன்சி செட்டில்மென்ட் என  அதகளம் பண்ணியிருந்தார் அமைச்சர் சி.வி. சண்முகம்.

அதிமுக இப்படி வேகமாக போய்க் கொண்டிருக்க, திமுகவும் சளைக்காமல் பொறுப்பாளர்களைக் களமிறக்கிவிட்டிருக்கிறது. திமுகவில் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு கிராமமாக சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்-தின் உள்ளூர் நிர்வாகிகளை வெளியூர் நிர்வாகிகள் சந்தித்து வேலைகளை சைலண்ட்டாக பார்க்கிறது.  ஒவ்வொரு பூத் அமைப்புக்கும் தலா 5000 ரூபாய் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துதான் சுவர் விளம்பரம் போன்ற ஆரம்பகட்டப் பணிகள், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்துக் கூட்டி வருவது உள்ளிட்டவற்றை திமுக நிர்வாகிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

வழக்கம்போல, அதிமுகவினரின் கைகளில் பணம் அதிகமாகப் புழங்க, திமுகவினரோ பார்த்துப் பார்த்து பார்த்து செலவு செய்து வருகின்றனர். அதாவது வேட்பாளர் பெயர் கூட போடாமல் சின்னத்தை மட்டுமே வரைந்துவிட்டு வருகிறார்களாம், காரணம் கேட்டால் அவங்க கொடுத்த 5000 ரூபாயில் சுண்ணாம்பு, திமுக கலரான கருப்பு, சிவப்பு வண்ணம்  வாங்க காசு பத்தலை இதுல எங்க வேட்பாளர் பெயரை போடுவது என முணுமூணுக்கிறார்களாம்.

திமுக தொண்டர்களின் நிலைமையை கேள்விப்பட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், தலைகாய்ஞ்சு போயிருக்கும் திமுக நிர்வாகிகளை என்ன செலவானாலும் கவனித்து தேர்தல் வேலை பார்க்காமல் ஆஃப் பண்ணுங்க, அவங்களை தேடிப்பிடிக்கவே வேணாம் அவங்க முகத்தை பாத்தாலே தெரியும் காசு இல்லாமல் எந்தளவுக்கு நொந்து போயிருப்பார்கள் என்று   அதனால அவங்களை தூக்குங்க என அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுகவினருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட வகையில், திமுகவோ முதல் கட்ட நிதியாக 5 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறது. இது பல திமுக நிர்வாகிகளை கட்டுப்படைய வைத்திருக்கிறது. தங்களுக்குக் கீழ் இருக்கும் நிர்வாகிகளிடம் காசில்லாமல் என்று சொல்ல முடியாமல் திமுக கிராம நிர்வாகிகள் பலர் தங்கள் கை காசை போட்டு செலவு செய்து வருகின்றனர்.