18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வரவிருப்பதையொட்டி  தமிழக சட்ட  அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முதலமைச்சரை மாற்றக்கோரிய டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவி இழப்பும் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட கடந்த ஒருவருட காலமாக இருக்கும் இந்த 18 எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி.ஆதரவு மூன்று எம்.எல்.ஏ.க்களுமாக மொத்தம் 21பேர் குற்றாலத்தில் தங்கி உள்ளனர்.

தீர்ப்பின் விபரம் எப்படியிருந்தாலும் 18 எம்.எல்.ஏ.க்களை காபந்து செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டி.டி.வி. இது ஆளுங்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறதோ என்ற அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடிமட்டத்தொண்டர்கள் முதல், அமைச்சர்கள் வரை இந்த தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில்தான் அதே பரபரப்போடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடிப்பதால் பரபரப்பு மேலும் தொற்றிக்கொண்டுள்ளது.