Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜியை தூக்கியடித்த சி.வி.சண்முகம்... அணைக்கட்டில் அதிமுக அசத்தல்..!

வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றாலும் அணைக்கட்டு தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் வாக்குகள் பெறும் வகையில் சி.வி.சண்முகம் தேர்தல் பணியாற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

CV Sankhumugam, who overthrew Senthil Balaji
Author
Tamil Nadu, First Published Aug 9, 2019, 4:35 PM IST

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக நூலிலையில் வெற்றி பெற்றிருக்கிறது. காலை நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அவரை துரத்தி சென்று பின்னுக்கு தள்ளினார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். கடும் இழுபறிக்கு பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.CV Sankhumugam, who overthrew Senthil Balaji

வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக பெரிதும் கவனம் செலுத்திய தொகுதி அணைக்கட்டு. இந்த தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 2,39,045. இங்கு 1,78,723 வாக்குகள் மட்டுமே பதிவானது. சுமார் 60,000- க்கும் மேற்பட்டவர்களின் வாக்குகள் பதிவாகவில்லை. இங்கு 10 ஆயிரம் வாக்குக்கள் கூடுதலாக அதிமுக பெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. CV Sankhumugam, who overthrew Senthil Balaji

திமுக சார்பில் அணைக்கட்டு தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டு இருந்தார். அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் களப்பணியாற்றினார். ஆனால், வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றாலும் அணைக்கட்டு தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் வாக்குகள் பெறும் வகையில் சி.வி.சண்முகம் தேர்தல் பணியாற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்தப்பகுதியில் வன்னியர் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios