வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் அவரது புகைப்படத்துடன் கட்டவுட் அடிக்கப்பட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது ,  கிம் ஜாங் உன் உருவம் பொறிக்கப்பட்ட  கட்டவுட்  புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் சர்வாதிகாரி என வர்ணிக்கப்படுபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் . உலகிலேயே மிக இளம்  வயதில்  அதிபர் பதவிக்கு வந்தவர் ஆவார் .  அவர் ஆட்சிக்கு வந்தபோது  இந்த சிறுவன் இவ்வளவு பெரிய நாட்டை எப்படி நிர்வகிக்க போகிறான் என அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கிம்மை  கேலி செய்தன. ஆனால் அதிபராக பொறுப்பேற்ற ஒரு சில வருடங்களிலேயே ஒட்டுமொத்த உலக நாடுகளையும் தன் அதிரடி நடவடிக்கைகளால் வடகொரியா பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் கிம். கிம் ஜான் உன் தந்தையின்  மரணத்துக்குப் பிறகு வடகொரியாவை ஆள ஒரு அனுபவம் வாய்ந்த வாரிசு இல்லை என்ற சூழ்நிலையில் அவரது இளைய மகனான கிம் இரண்டு வாரம் கழித்து கட்சியின் தலைவராகவும் அரசாங்கம் மற்றும் ராணுவத்தின் தலைவராகவும் பதவி ஏற்றார் .

 

அப்போதிலிருந்தே வடகொரியாவின் ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட கிம் ,  அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகள்  நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .  அதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை  நடத்தியது ,  தென் கொரியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது கிம்மிற்கு  உலக அரங்கில் நல்ல பெயரை பெற்று தந்தது பதவியேற்ற ஒரு சில வாரங்களிலேயே தான் அதிகாரத்திற்குவர காரணமாக இருந்த தன்  சொந்த மாமாவையே கைது செய்தார் என்ற குற்றச்சாட்டும் கிம்மின் இறக்கமற்ற முகத்தை  உலகிற்கு காட்டியது .  உலகில் உள்ள மற்ற நாடுகளெல்லாம்  அமெரிக்காவை பார்த்து அஞ்சி நடுங்கி வரும் நிலையில் ,  கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி அமெரிக்காவை அலற வைத்தார் கிம் .  இதனால் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்திற்கு பதற்றம் ஏற்பட்டதால் ,  அணுஆயுத தடை ஒப்பந்தத்தில் வடகொரியா கையெழுத்திட வேண்டும் என ஐநாவில் அமெரிக்கா நிர்ப்பந்தித்தது . 

இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே பகை அதிகரிக்க ,  ட்ரம்ப் மற்றும் கிம் இடையில் வர்த்தக போர் தீவிரமானது .  வடகொரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என அமெரிக்கா கிம்மை  வர்ணிக்கு ,  மூளை தடுமாற்றத்தில் இருக்கும் முதியவர் என டிரம்புக்கு கிம் பதிலடி கொடுத்தார் . இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர்  கிம் -  ட்ரம்ப் இடையே நடந்த  அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது  அமெரிக்காவை இந்த அளவிற்கு நடுங்க வைக்கும் இந்த கிம் யார் என உலக நாடுகளின் பார்வை கிம்மின் பக்கம் திரும்பியது அன்று முதல் இன்றுவரை உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வருகிறார் கிம்.   இந்நிலையில்  தமிழகத்திலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் கூத்தனூர் என்ற கிராமத்தில்  நடைபெற்ற ஒரு திருமணத்தில்  " கிம்மின்  ஆதரவாளர்கள் "   " கிம் மின் விழுதுகள் " என்ற பெயரில் கட்டவுட் அடிக்கப்பட்டுள்ளது .   தமிழகத்தில் தனக்கு பிடித்த நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை வைத்து கட்டவுட் அடித்து  காதுகுத்து , மஞ்சள் நீராட்டு விழா திருமணம் போன்ற  சுபநிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின்  கட்டவுட் உடன்  திருமணம் நடைபெற்றிருப்பது  சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது .  அதற்கான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .  இதேபோல சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  இந்தியா வருகை தந்தபோது , அவருக்கு கோயில் கட்டிய சம்பவங்களும் ,அவருக்கு கட்டவுட் வைத்து பலர் வாழ்த்து தெரிவித்த சம்பவங்களும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.