தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி முடிவடையும் ஊரடங்கை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி முடிவடையும் ஊரடங்கை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனா 2வது மிக வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்த மே 1ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் மக்களின் அலட்சியத்தால் கொரோனா தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. எனவே, வேறு வழியில்லாமல் தமிழக அரசு மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 

அதன்படி கடந்த 1ம் தேதி முதல் தமிழக அரசு பிறப்பித்திருந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. முழு ஊரடங்கின் பலனாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் சிலர் தளர்வுகளை அமல்படுத்தலாமா? அல்லது தளர்வுகளற்ற ஊரடங்கையே தொடரலாமா? என்பது குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், உயரதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அதிகம் உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.