தமிழகத்தில் 14ம்  தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் 14ம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீவிர ஊரடங்கு கடந்த இரு வாரங்களாக அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜூன் 7ஆம் தேதி காலை வரை இந்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் ஊரடங்கை மீண்டும் ஒரு வாரம் நீட்டிக்க மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதன் அடிப்படையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.