Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஊரடங்கு..? மதில்மேல் பூனையாய் தமிழக அரசு..!

ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் அதை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
 

Curfew again ..? Government of Tamil Nadu as a cat on the wall ..!
Author
Tamil Nadu, First Published Jun 10, 2021, 10:25 AM IST

ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் அதை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.Curfew again ..? Government of Tamil Nadu as a cat on the wall ..!

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகளில் அந்த சூழ்நிலை எழவில்லை. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதுபோன்ற சூழலில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் என்ற அளவுக்கு பதிவான தொற்று தற்போது 17 ஆயிரம் என்கிற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயம் கோவை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தினசரி தொற்று தொடர்ந்து ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது.

Curfew again ..? Government of Tamil Nadu as a cat on the wall ..!

இந்த சூழலில் வருகிற 14ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.Curfew again ..? Government of Tamil Nadu as a cat on the wall ..!

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார். தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. அங்கும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பதும் இந்த கூட்டங்களுக்கு பிறகுதான் தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios