Asianet News TamilAsianet News Tamil

கடலூர் பாஜக ஐடி விங்க் நிர்வாகியை வீடு புகுந்து தூக்கிய நெல்லை போலீஸ்..!

தமிழக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வரும் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

Cuddalore BJP IT Wing Admin Arrest
Author
First Published Jul 18, 2023, 1:20 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வரும் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

Cuddalore BJP IT Wing Admin Arrest

இந்நிலையில், கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து திமுக நிர்வாகி நெல்லை போலீசில்  புகார் அளித்தனர். 

Cuddalore BJP IT Wing Admin Arrest

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நெல்லை போலீசார் கடலூர் சென்று பாஜக நிர்வாகி ஜெயகுமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயகுமார் விசாரணைக்காக நெல்லை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios