Asianet News Tamil

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த கியூபாவுக்கு அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்ததாக கியூபா குற்றச்சாட்டு.!!

கொரோனோ வைரஸ் ஆக்டோபஸ் போல் தன் கைகளை உலகமெங்கும் விரித்திருக்கிறது.ஒவ்வொரு நாட்டின் மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. எங்கே தங்களை வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் முடங்கி போயிருக்கிறார்கள். 

Cuba accuses Cuba of inventing medicine for Corona
Author
Cuba, First Published Mar 25, 2020, 9:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

T.Balamurukan

கொரோனோ வைரஸ் ஆக்டோபஸ் போல் தன் கைகளை உலகமெங்கும் விரித்திருக்கிறது.ஒவ்வொரு நாட்டின் மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. எங்கே தங்களை வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் முடங்கி போயிருக்கிறார்கள். 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற  அச்சம் நம்மை விட்டு இன்னும் அகலவில்லை. கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் தடுப்பது எப்படி என்பதில்தான் நமது கவனம் முழுவதும் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த படாதபாடுபட வேண்டியிருக்கிறது.இந்தியாவில் 144 தடை உத்தரவு போட்டு மக்களை முடக்கி வைத்திருக்கிறது.

இந்தநிலையில், ஓர் ஆறுதலான செய்தி கியூபாவிலிருந்து வெளிவந்திருப்பது, உலக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.கொரோனா வைரஸ் தாக்குதலைக் குணப்படுத்தும் மருந்துகள் தம்மிடம் இருப்பதாக கியூபா அரசு அறிவித்திருக்கிறது.  Interferon alpha 2B என்ற மருந்து உட்பட 23 மருந்துகள் தங்களிடம் தயார்நிலையில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது.
சென்டர் ஃபார் ஜெனெட்டிக் என்ஜினியரிங் அண்ட் பயோ டெக்னாலஜி (CIGB) என்ற நிறுவனம் ஒரு கியூபா மற்றும் சீன கூட்டு நிறுவனம் ஆகும். இது சீனாவின் சாங்க் சுன் நகரில் உள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக இந்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

Biomodulin T என்ற மருந்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் பயன்படுத்தபடுகிறது. மனித குலத்தை அச்சுறுத்தி வந்த ஹெபடிட்டிஸ் பி மற்றும் சி,  ஹெச்ஐவி-எய்ட்ஸ், டெங்கு போன்ற நோய்களுக்காக மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1986 இல் கியூபாவில் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்டர் ஃபார் ஜெனெட்டிக் என்ஜினியரிங் அண்ட் பயோ டெக்னாலஜி. அப்போது கண்டுபிடிக்கப்பட்ட 2 பி ஆல்பா இன்டர்ஃபெரான் மருந்துகள். இந்த மருந்துகளின் முக்கியப் பணியாக நமது உடலில் உள்ள செல்கள் பன்மடங்கு அதிகரிப்பதைத் தடுப்பதாக இருந்தது. இதனால் பலவிதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்துகள் உகந்தவையாக இருக்கின்றன.

2003 ஆம் ஆண்டு இம்மருந்துகள் தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்பங்களை கியூபா, சீனாவுடன் பகிர்ந்து கொண்டது. அதற்குப் பிறகு இருநாடுகளும் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்த ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக கொரோனா வைரஸின் தாக்குதலின் தன்மையை அறிந்து தற்போது 23 மருந்துகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது கியூபாவில் பயன்படுத்தப்படும் கரோனோ வைரஸுக்கு எதிரான மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துபவையாக இருக்கிறது.இந்த மருந்துகளை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்து, பரிசோதனைகள் செய்து பார்த்து,  மேலும் இந்த மருந்துகளைப் படிப்படியாக மேம்படுத்தி புதிய மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்காக உருவாக்கியுள்ளார்கள். இந்த மருந்துகள் கொரோனா வைரஸ் உடலில் தொற்றி பல்கிப் பெருகுவதைத்  தடுத்துவிடுகின்றன. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்துகள் தரப்பட்டு பலர் நலமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்த மருந்துகள் சிறிய நாடான கியூபாவில், 300க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்களில் தயாரிக்கப்படுகின்றன. மருத்துவ மையங்களிலும், மருந்துக்கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கின்றன. உலகில் இந்த மருந்தின் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு குறைந்தது 3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரை இந்த மருந்துகள் கிடைக்கும் அளவுக்கு தற்போது உற்பத்தி செய்திருக்கிறார்கள்.இம்மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைப் பெறுவதையும், மருந்து தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பாகங்களைப் பெறுவதையும் தடுத்து கியூபாவின் ஆராய்ச்சி முயற்சிகளை முடக்க நினைத்த அமெரிக்காவின் முயற்சிகளையும் மீறி இவற்றை தயாரித்திருப்பதாக பயோகியூபாஃபார்மா நிறுவனத்தின் தலைவர் மார்ட்டினெஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios