கதவு  திறக்கபடாமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது பவானீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்தவுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். 

வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 40 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை முத்துமாரி அம்மன் காலனியைச் சேர்ந்தவர் பவானீஸ்வரி(18). அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த மாதம் 3 ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி திருவேற்காடு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அதே தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து 15 நாட்களாக வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திக்கும், பவானீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் ஆத்திமடைந்த பவானீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று கார்த்திக் மனைவி பவானீஸ்வரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென கூறி சமாதானம் செய்யச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்துடன் தனது அறைக்குச் சென்ற பவானீஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரானல் இருந்தார். கதவு திறக்கபடாமல் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது பவானீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்தவுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கே பவானீஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் பவானீஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக இளம்பெண் பவானீஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து கணவரான கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்து கொண்ட 40 நாட்களில் தனது மகளை வரதட்சணை கேட்டு கார்த்திக் கொடுமைப் படுத்தியதாக பவானீஸ்வரியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.